உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தர் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தர்களின் கோலம் உலகியலிலிருந்து சற்றே மாறுபட்டது.[1] சித்தர்கள் உலகியலைத் துறந்தவர்கள். அவர்களது பாடல்களும் உலகியலைக் கடந்தனவாக இருந்தன. ஓடே கலன். உண்பது ஊரிடு பிச்சை எனப் பெரும்பாலோர் வாழ்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் மாறுபட்டிருந்தன. சட்டைமுனி் [2] என்னும் சித்தர் சட்டை அணிந்துகொண்டே இருந்தார். அதனால் இவரைச் சட்டைமுனி என்றும், சட்டமுனி என்றும் வழங்கினர். கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் குறிப்பிட்டனர். பட்டினத்தார் [3] துறவு பூண்ட பின்னர் கோவணம் மட்டுமே உடுத்திக்கொண்டிருந்தார். சிற்றம்பல நாடிகளும், அவரது மாணாக்கர்களும் [3] பழுதையைக் [4][5] கட்டிக்கொண்டே வாழ்ந்தனர். வள்ளலார் [6] தலையில் எப்போதும் முக்காடு போட்டுக்கொண்டே வாழ்ந்தார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 71. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. 16 ஆம் நூற்றாண்டு
  3. 3.0 3.1 14 ஆம் நூற்றாண்டு
  4. பழுதான கிழிந்த துணிகள்
  5. வைக்கோல் புரியாலான பழுதைக் கயிற்றைக் காலில் கட்டிக்கொண்டே வாழ்ந்தார் எனவும் கூறுவர்
  6. 19 ஆம் நூற்றாண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_கோலம்&oldid=2715250" இலிருந்து மீள்விக்கப்பட்டது